முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகப்பாபல்கலைக்கழகத்தில்; 69-வது குடியரசு தினவிழா

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில்; 69-வது குடியரசு தினவிழா நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மற்றும் வளாக பாதுகாவலர்களின்; அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு குடியரசுதினவிழா உரை நிகழ்த்தினார்.
 அவர் தமது உரையில், நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தியாகிகளை இந்தநேரத்தில் நினைவுகூர்ந்தார். நமது மூவர்ணக் கொடியானது, தேசப்பற்றையும், தூய்மையையும், வளமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுஎன்றார். நமதுநாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் உலகில் 3ஆம் இடத்திலும் உயர்தரமான அறிவியல் ஆராய்ச்சியில் 2வது இடத்திலும் அறிவியல் ஆராய்ச்சி வெளியீட்டில் உலகின் முதல் 10 நாடுகளின் வரிசையில் ஒன்றாகவும் நமதுநாடு உள்ளது எனத் தெரிவித்தார்.
 நமதுநாடு 25 புதுமைபடைப்பு உருவாக்க மையங்களை (ஐnழெஎயவழைn ஊநவெசநள)கொண்டு ஆசியாவில் முதலிடத்திலும் உலகளவில் 2வது இடத்திலும் உள்ளது என்பதை பெருமையோடு தெரிவித்தார். இது போன்ற அபரிதமான வளர்ச்சிகள் இருந்த போதிலும் உலக வெப்பமயமாதலின் தாக்குதல், சமத்துவமின்மை போன்ற பல்வேறு சமூகபிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். மேலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் முக்கியச் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள், நிர்வாகபணியாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து பல்கலைக்கழகத்தை உயர்கல்வியின் உச்சத்திற்கு கொண்டுசெல்ல அனைவரும் பாடுபடவேண்டும்; எனகேட்டுக் கொண்டார்.
 அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் நுண்கலைத் துறைமாணவ-மாணவியர்களின்  கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
 பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஹா. குருமல்லே~;;பிரபு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா.அ.நாராயணமூர்த்தி, கே.குருநாதன், நிதிஅலுவலர் திரு எஸ். முருகராஜ், தனிஅலுவலர் பேரா.வி.பாலச்சந்திரன் மற்றும் அனைத்து புலமுதன்மையர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து