முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டுபாக்கத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி: எம்எல்ஏ ரவி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      வேலூர்

 

ஆட்டுபாக்கம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் புதிய விடுதியினை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ஆட்டுபாக்கம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல்; கல்லூரி உள்ளது. இந்த கல்லூhயில் பயிலும் பெண்கள் தங்கிபடிப்பதற்கான தங்கும் விடுதி திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

திறப்பு விழா

மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் ஙெபிரகாஷ் தலைமை தாங்கி. அவர் பேசிய போது தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த கல்வியாண்டில் எந்த விடுதிகள் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? 5விடுதிகள் கட்டவே அரசு அனுமதி கொடுத்திருக்கிறது அதில் ஒன்று அரக்கோணம். இந்த நல்ல மயற்சி எடுத்த நம்முடைய எம்எல்ஏ- விற்கு மாவட்டத்தின் சார்பிலும் உங்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்க கடமைபட்டு இருக்கிறேன் என பேசினார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று புதிய விடுதியை திறந்து வைத்து பேசினார் அவர்பேசிய போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் அட்சி செய்தபோது தமிழகத்தில் குறைந்த அளவில் கல்லூரிகள் இருந்தன உடனே 105கல்லூரிகளை திறந்தார் இதன்மூலம் உயர்கல்வி தரம் 12 விழுக்காட்டிலிருந்து 44.5விழுக்காடு உயர்த்தி காட்டினார். மேலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டோம்.

 

மாணவர்களுக்காக தங்கும் விடுதிகள் கட்டி கொடுப்பது எதற்காக தெரியுமா? நீங்கள் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக ஏனெனில், பலர் உயாந்த வெலைகளில் சேர்ந்திருப்பதாக பலபுள்ளி விவரங்களில் நிருபவனம் ஆகி இருக்கிறது. இந்தாண்டிலே உங்களுக்காக (மாணவர்களுக்காக) மூன்று விடுதிகள் அனுமதிபெற்று இருப்பதும் சாதனையாகும் என பேசினார். முன்னதாக கூட்டத்திற்கு வந்தவர்களை முதல்வர் கவிதா வரவேற்று பேசினார் தாசில்தார் வேணுகோபால் முன்னிலை வகித்தார். ஏவி.மோகன், ஏஎம்.நாகராஜன், ஏஎல்.நாகராஜ், இளம் பாசறை எல.வினோத்குமார், நா.சங்கர், கேசவன், வருவாய் துறை பள்ளுர் ஆய்வாளர் சாந்தி, உட்பட கல்லூரி போராசிரியர்கள், மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து