முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12பெட்டிகளுடன் சென்னைக்கு மின்சாரரயில் சேவை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      வேலூர்
Image Unavailable

அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு 12 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சேவை நேற்று முதல் துவக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அரக்கோணம் ரயில்பயணி சங்கத்தினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். இது குறித்து விவரம் வருமாறு. சென்னைக்கு மேற்கே பெங்களுர், பாம்பே மார்கத்தில் சுமார் 68கிமி தூரத்தில் அரக்கோணம் ரயில் நிலையம் இருக்கிறது. இது நான்கு புறமும் ரயில் பாதைகளை இணைக்கும் இயற்கையாக அமைந்த ரயில் சந்திப்பாகவும்

மின்சார ரயில் சேவை

இந்த ரயில் நிலையத்தினை தினமும் ஆயிரகணக்காண பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் எனவே, பயணிகள் அனைவரின் குறைகளை போக்கும் அரும்பணிகளில் அரக்கோணம் ரயில்பயணிகள் சங்கம் முழுமையாக ஈடுபட்டு வருகிறது என்றால் அதுமிகையாகாது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற அரக்கோணம் ரயில்பயணி சங்க தலைவர் நைனா மாசிலாமணி பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேசி அதிகாரிகளையே திணறடித்தாகவும் கூறப்படுகிறது.

அதன்பயனாக பல்வேறு கோரிக்கை நிறைவேற்றபட்டு இருப்பது தற்போது தெரியவந்தது. அதாவது நெ1.12பெட்டிகள் கொண்ட மின் தொடர் இயக்கம். நெ2.ஏக்சிலேட்டர் வசதி (தானியங்கி படிக்கட்டு) 3.லிப்ட் வசதி, 4.கூடுதல் சைக்கிள் நிறுத்தம், 5.காட்பாடியில் இருப்பது பொல் ராம்ப் வசதி, 6வது மிகவும் முக்கியமானது இரவு 11.20 மணியளவில் ஆவடி வரையிலான கடைசி மின்சார ரயில் சேவை இவைகள் மூலம் பெரிய மாற்றத்தை அரக்கோணம் ரயில் நிலையம் சந்திக்க போகிறது. இந்நிலையில் அறிவிப்பின்படி நேற்று காலை அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு 12 பெட்டிகளுடன் மின்சார ரயில் சேவை துவங்கியது. அப்போது நடைமேடையில் ஒன்று திரண்ட அரக்கோணம் ரயில்பயணிகள் சங்கத் தலைவர் நைனி மாசிலாமணி, பொது செயலாளர் ஜெகே.ரகுநாதன், மற்றம் நிர்வாகிகள் செந்தில்குமார், எம்.அருள்தாஸ் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து