முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய ராகுல் வேண்டுகோள்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாநிலம் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, கூடுதல் நிதி, பல்வேறு திட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி மத்திய அரசு அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் சிறப்பு நிதியை அறிவிக்கவில்லை. இதையடுத்து தனது அதிருப்தியை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தினார்.

ஆந்திர மாநில மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால் ஆந்திர மாநில மக்களுக்கான நீதி கிடைக்கும். - ராகுல்

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆந்திர மாநில மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால் ஆந்திர மாநில மக்களுக்கான நீதி கிடைக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார் ராகுல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து