முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் ரிவேரா 18 கலை விழாவில்ஐக்கியா இந்திய மக்களின்பல்வேறு கலாச்சாரம் பற்றிய நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      வேலூர்
Image Unavailable

விஐடியில் நடைபெற்று வரும் ரிவேரா18சர்வதேச கலை விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற ஐக்கியா என்ற நிகழ்வில் இந்தியநாடடில் உள்ள பல்வேறு மொழி பேசும்மக்களின் கலாச்சாரம் மற்றும்பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்ஆடல் பாடல்களுடன் நடத்தி காட்டினர்.அதேபோல ஆப்ரிக்கா சீனா நாட்டுமக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்பற்றி விஐடியில் பயிலும் அந்த நாட்டுமாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள்இதில் அமைந்தன. இந்த ஐக்கியாநிகழ்வினை பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து பரவசமடைந்து பாராட்டினர். இதனை விஐடிதுணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில் தமிழ்நாடுமகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கதலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார். இதில் இணை துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், திருமதி அனுஷா செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலை விழா

விஐடியில் நடைபெற்று வரும் ரிவேரா18சர்வதேச கலை மற்றும் விளையாட்டுவிழாவின் ஒரு அங்கமாக இன்று பிற்பகல்டெக்னாலஜி டவர் பகுதியில் விஐடியில்ஐக்கியா என்ற வண்ணமிகு நிகழ்வுநடைபெற்றது. இந்திய நாட்டில் உள்ளபல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிபேசும் மக்களின் பாரம்பரிய கலாச்சாரம்,பண்பாடு, வாழ்க்கை முறை, இறை வழிபாடுஉள்ளிட்டவைகளை ஆடல் பாடல்கள் மூலம்மாணவமாணவியர் நிகழ்த்தி காட்டினர்.

தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மற்றும்தெலுங்கான மாநில மக்களின் பாரம்பரியவாழ்க்கை முறையை விளக்கியும்அக்காலத்தில் போரில் வெற்றி பெற்று நாடுதிரும்பும் அரசனுக்கு மக்கள் அளித்தவரவேற்பு முறையை மாணவ மாணவியர்காட்சியாக விளக்கி ஆடல் பாடலுடன்அரங்கேற்றினர். அதனை தொடர்ந்துவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம்மாநில மக்களின் வாழ்க்கை முறையைவிளக்கும் விதமாகவும் கிராமிய மற்றும்கிளாசிக்கல் நடனம் மூலம் மாணவர்கள்அரங்கேற்றினர். இந்த நிகழ்வில் பங்கேற்றவிஐடியில் பயிலும் ஆப்ரிக்க நாட்டு மாணவமாணவியர் அந்நாட்டு மக்களின் இறைவழிபாடு, வாழ்க்கை முறை, விவசாயம்மற்றும் வேட்டையாடுதல் போன்றதொழில்கள் பற்றி விளக்கும் நிழ்வினைநடத்தி காட்டினர்.

பிகார் மாநிலத்தின் பாரம்பரியம் கலாச்சாரம்பற்றியும் நாட்டின் விடுதலை போராட்டத்தில்அவர்களின் பங்களிப்பு பற்றியும் நாடகம்மற்றும் நடனம் மூலம் அரங்கேற்றினர்.மேற்கு வங்க மாணவர்கள் அம்மாநிலமக்களின் திருமண நிகழ்ச்சி இறை வழிபாடுகாளி வாதம் போன்றவை சிறப்பாகஅமைந்தது. குஜராத் மாநிலத்தின்பெருமைக்குரிய தாண்டிய நடனத்தைஆடிபாடி மகிழ்ந்தனர். ஜம்மு காஷ்மீர்மாநிலத்தின் பாங்ரா நடனம் ஆடியதுடன்கார்கில் வெற்றியை கொண்டாடு வகையில்மாணவர்களின் பங்களிப்பு அமைந்தது.

மலையாளம் மொழி பேசும் கேரளமாநிலத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களான களரி சண்டை, கத்திசண்டை, சிலம்பம், சுருள் வீச்சு,ஆகியவற்றுடன் அம்மாநில மக்களின்பாரம்பரிய கிராமிய நடனங்கள் பற்றியமாணவமாணவியரின் நிகழ்வுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மகாரஷ்டிர மாநிலத்தின் அனுமன் ஜெயந்திசிவன் வழிபாடு ஆகியவற்றுடன் அந்தந்த மாநில பாரம்பரிய கலைகளைஆடல்பாடலுடன் மாணவர்கள்அரங்கேற்றினர். பஞ்சாப் மாநிலத்தின்பாங்ரா நடனம், ஒடிசா மாநிலத்தின் கலைகள்இந்த நிகழ்வில் இடம்பெற்றன. மேலும்தமிழர்களுக்கே உரித்தான மாட்டு வண்டியில்வந்த தமிழின மாணவ மாணவியர் தமிழகத்தின் கலச்சாரம் பண்பாடுபாரம்பரியத்தை விளக்கும் வகையில் தாரைதப்பட்டையுடன் கிராமிய நடனங்கள் மூலம்விளக்கி நடத்தினார். உத்திர பிரதேச மாநிலமக்களின் முக்கியத்தை விளக்கும் மதுராவில்கிருஷ்ண பகவான் ஜெயந்தி உள்ளிட்டபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தஐக்கியா நிகழ்வு நடைபெற்றது. இறுதியில்ஐக்கியா நிகழ்வில் பங்கேற்ற மாணவமாணவியர் இந்திய நாட்டின் ஒற்றுமையைபறைசாற்றும் வகையில் தேசிய கொடியுடன்அணிவகுத்து வந்து தேசிய கீதம்இசைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து