முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கிரிவலப்பாதை விரிவாக்க பணி திருப்தி அளிக்கிறது பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி ஜோதிமணி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      வேலூர்
Image Unavailable

 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணி திருப்தி அளிப்பதாக பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி தெரிவித்தார்.

விரிவாக்க பணி

திருவண்ணாமலையில்நு கடந்தநு 2014ல் 65 கோடி ரூபாய் மதிப்பில் கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி பணி நடந்து வந்தது. சாலை விரிவாக்க பணியில் மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை அடுத்து பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி விரிவாக்க பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கோசாலையில் இடைக்காட்டு சித்தர் வழிபாட்டு மன்றம் சப்தரிஷிகளின் நலம்தரும் நாடி ஜோதிட ஆராய்ச்சி மையம் சித்தைத்தாய் வேதம் ஆராய்ச்சி மற்றும் சேவை மையம் சார்பில் 18 சித்தர்கள் குடில் திறப்பு விழாவில் பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி கலந்து கொண்டு 18 சித்தர்கள் திருவுருவ சிலைகளை திறந்துவைத்து பேசுகையில் இந்த மலையை சுற்றி சித்தர்கள் இருப்பதாக கூறுகின்றனர். எனவே கிரிவலம் வரும் பக்தர்களுக்கு செய்யும் சேவை சித்தர்களுக்கு சேவை செய்வது போல் ஆகும். இப்பகுதியில் இருந்த 920 நீருற்றுகள் இப்போது இல்லை. சித்தர்கள் மனது வைத்தால் அந்த நீருற்றுகள் மீண்டும் வரலாம். மலையிலிருந்து வரும் வெள்ளம் இந்த நீருற்றுகளை சேர வேண்டும் என்பதற்காகவே மலையை ஒட்டி ரோடு போட அனுமதி அளிக்கவில்லை. பக்தர்களுக்கான வசதிகளை அசே செய்து விட முடியாது. இது போன்ற ஆன்மீக அமைப்புகளும் பங்காற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.கிருபாநிதி சப்த ரிஷிகளின் நலம் தரும் நாடி ஜோதிட ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் ஓம் உலகநாதன் வி.டி.கோவிந்தராஜ் சித்தர் கமலா பீடத்தின் நிறுவனர் சீத்தா சீனிவாசன் ஸ்வஸ்திக் சித்தா தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பிறகு பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சி.ஜெயசேகரன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணி திருப்தி அளிப்பதாகவும்நு குடிதண்ணீருக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் கழிவு நீர் கால்வாய்கள் அமைத்திருப்பது பாராட்டத்தக்கது என்றும்நு கிரிவலப்பாதையில் கலப்பட பொருட்கள் விற்பனையை தடுத்து அவற்றை பறிமுதல் செய்திட வேண்டும் என்றும்நு 920 நீருற்றுகளை கண்டறிய குழு அமைத்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து