முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்காடு மற்றும் அரக்கோணம் ரூ.9.21 கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடம் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அடிக்கல் நாட்டினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் ஆற்காடு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஏ மற்றும் பி பிளாக் கட்டிடங்களை இணைக்கும் கட்டிட இணைப்பு பாலம் என ரூ.9.21 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அடிக்கல் நாட்டினார்கள். இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் அனிதா சுமான்த், எம்.வி.முரளிதரன், டிகாராமன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்ககொண்டனர்.

புதிய கட்டடம்

இவ்விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். கலெக்டர்; சி.அ.ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் நீதித்துறை சிறப்பாக இயங்கி வருகிறது. மாவட்டத்தில் இன்றைய தினம் ஆற்காடு நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.378.12 இலட்சம் மதிப்பீட்டிலும். நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.377.2 இலட்சம் மதிப்பீட்டிலும், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ94.43 இலட்சம் மதிப்பீட்டிலும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஏ மற்றும் பி பிளாக் கட்டத்தை இணைக்கும் கட்டடிட இணைப்பு பாலம் ரூ.20.97 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆகமொத்தம் ரூ9.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடித்திற்கு அடிக்கல் நாட்டப்படுவது மிகவும் மகிழச்சியளிக்கிறது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அவர்களின் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதித்துறையை மிகவும் மதித்து தங்கள் பிரச்சனைகளை களைய நாடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை கணிவுடன் தீர்த்து வைக்க நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அந்த நீதித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசினார்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா நல்லாட்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலக கட்டடங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் அம்மா கொள்கை முடிவு எடுத்தார். அதன் விளைவாக பல்வேறு துறை கட்டடங்கள் சொந்த கட்டத்தில் இயங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் தற்போது அழகான சொந்த கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் அக்கோரிக்கையினை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஆற்காடு அரக்கோணம் நீதிமன்ற புதிய கட்டடங்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டிட இணைப்பு பாலங்கள் ரூ.9.21கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நீதித்துறைக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகப்படியான மகிளா நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. அதிக அளவில் பெண் வழக்கறிஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்று நீதித்துறைக்கு தொடர்ந்து தன்னுடைய பங்கை அளித்து நீதித்துறை சிறப்பாக செயல்பட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு உடனுக்குடன் வழங்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரேம்சந்தர், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, பார் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் நந்தகுமார், ரவி, ராமன், டி.ரவி, தினகரன். காஞ்சனா அறிவழகன், வேலூர் மாவட்ட முதன்மை வழக்கறிஞர் ராஐ_ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து