முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து 17.2.2018 அன்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, செய்தியாளர்களுடன் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வருவாய் கோட்ட அலுவலர் பொ.கிருபானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சிப் பணிகள்

மாவட்ட கலெக்டர் செய்யார் ஊராட்சி ஒன்றியம், பாப்பந்தாங்கல் ஊராட்சியில், தனி நபர் இல்லக் கழிறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் மணி த.பெ. மாணிக்கம், சரோஜா க.பெ. பழனி ஆகியோர் வீடுகளில் ரூ.12 ஆயிரம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாப்பந்தாங்கல் ஊராட்சியில் மொத்தம் 134 வீடுகள் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் சுரேஷ் தஃபெ. ஏகாம்பரம் என்பவரது இடத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டினை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் பாப்பந்தாங்கல் ஊராட்சியில் 5 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தாய் திட்டம் - 2ன்கீழ் பாப்பந்தாங்கல் ஊராட்சியில் ரூ.6.65 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூறையுடன் கூடிய தகன மேடையினை மாவட்ட கலெக்டர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பார்வதி க.பெ வாசுதேவன் என்வரது இடத்தில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் செய்யார் ஊராட்சி ஒன்றியம், பைங்கினர் ஊராட்சியல் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மினி விளையாட்டு மைதானம் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மைதானத்தில் ஓடு தளம், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து கோர்ட், பார்வையாளர் அரங்கம், நிலீவாகப் பிரிவு, பொது கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது, செய்யாரில் அமைக்கப்பட்டு வரும் மினி விளையாட்டு மைதானம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து