முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகச்சான்றோர் சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா 20 பேருக்கு சாதனை மகளிர் விருது

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

உலகச் சான்றோர் சங்கம் - நந்தினி பதிப்பகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா தி.மலை கணேஷ் பன்னாட்டு தங்கும் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு உலகச் சான்றோர் சங்கத் தலைவர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் தலைமை தாங்க, விழாவுக்கு அனைவரையும் எழுத்தாளர் ந.சண்முகம் வரவேற்று பேசினார்.

முப்பெரும் விழா

மாவட்ட தமிழ்ச் செம்மல் பா.இந்திரராசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.விஜயகுமார், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.மண்ணுலிங்கம், புலவர் ஆ.ஆறுமுகம், மாலாசந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமராவதி முருகையன் நினைவு முன்மாதிரி பள்ளி தலைவர் சீனி.கார்த்திகேயன் - எழுத்தாளர் ந.சண்முகம் எழுதிய முகநூல் மாணிக்கங்கள் நூலை வெளியிட ஓவியர் சோ.ஏ.நாகராசன், ஆர்.சாமிக்கண்ணு, ஏ.வி.சீனுவாசன், லதாபிரபுலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பேராசிரியர் ப.வேட்டவராயன், சண்முகம் எழுதிய சிந்தனை மலர்கள் நூலை வெளியிட அ.வாசுதேவன், கு.சபரி, தொழிலதிபர் சி.எஸ்.துரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பாக மகளிர் தொண்டாற்றிய தி பாத் குளோபல் பப்ளிக் பள்ளி முதல்வர் எஸ்.உமாமகேஸ்வரி, வெ.சென்னம்மாள், ஆ.பாக்கியலட்சுமி, ரோஸ்லின் ஜெகதீஷ் ஹென்றி, ப.சுமதி, க.கல்யாணி நடராசன், ரேவதி சந்தோஷ், உள்பட 20 பேருக்கு சாதனை மகளிர் விருதுகள் வழங்கி திரைப்பட இயக்குநர் ராசி.அழகப்பன் சிறப்புரையாற்றினார்.

சாதனை மாமனிதர்களான சமூக சேவகர் பி.மணிமாறன், அம்பி. பீ.சுப்பிரமணி, வி.மோகனசூர்யா, வெ.ராமு ஆகியோர்களுக்கு பா.இந்திரராஜன் விருதுகள் வழங்கினார்.

முப்பெரும்விழாவையட்டி முன்னதாக ப.நந்தினி செல்வி நிறைமதி சந்தோஷ் பரதநாட்டியம் நடைபெற்றது. விழாவில் பாவலர் ப.குப்பன், பி.கோ.கோவிந்தராசன், மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் இரா.அருள், தங்க விஸ்வநாதன், கல்வியாளர் கிருஷ்ண கஜேந்திரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை கவிஞர் உமாதேவி பலராமன் தொகுத்து வழங்கினார். ஓவியர் சோ.ஏ.நாகராஜன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து