சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகிறது 3-வது அணி: ஏப்ரல் 7-ல் அமராவதியில் முதல் கூட்டம்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      அரசியல்
chandrababu naidu 2017 1 22

அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி உருவாகிறது. இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அமராவதியில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

காங்கிரஸ், பா.ஜ அல்லாத தேசிய அளவிலான 3-வது அணி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாக உள்ளது. இதற்காக சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தற்போது மத்திய அரசு மீது அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாராளுமன்ற சபாநாயகரிடம் தனது கட்சி எம்.பி.க்கள் மூலம் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தேசிய அளவில் 3-வது அணியை அமைக்க சந்திரபாபு நாயுடு திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, அவர் நேற்று 11 கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சரத் பவார், மம்தா பானர்ஜி, மாயாவதி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), பரூக் அப்துல்லா (நேஷனல் கான்பரன்ஸ்), அர்விந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), நவீன் பட்நாயக் (பி.ஜே.டி), ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்தியன் நேஷனல் லோக்தள்), அசோம் கணபரிஷத் (ஏ.ஜி.பி) ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த 3-வது அணியில் மேலும் சில கட்சிகள் அங்கம் வகிக்கும் என தெரிய வந்துள்ளது. மேலும் 3-வது அணியின் முதல் மாநாடு ஏப்ரல் மாதம் அமராவதியில், சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கிய மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய அரசியலில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து