முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மேலக்காடுப் பகுதியில்  வனத்துறையின் மூலம் மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டம்  துவக்கி வைக்கும் நிகழ்ச்சி  மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்து தெரிவிக்கையில்,
           மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பசுமைப் புரட்சியை உருவாக்கும் விதமாக அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்து வனத்துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் மரக்கன்றுகளை நடவு திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டு வருவதுடன் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துவக்கி வைத்த திட்டம் அவர்களுக்கு பின்னாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டு தற்பொழுது அனைத்துப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் நோக்கம்; கிராமம் முதல் நகர்ப்பகுதி வரை அனைத்துப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு அதிகளவில் மரங்கள் வளர்க்கும் பொழுது மனிதர்களுக்கு சுகாதாரமான காற்று கிடைப்பதுடன் தேவையான காலக்கட்டங்களில் மழை பொழிவதற்கும் மரங்களின் பங்கு மிக முக்கியமாக இருந்து வருகின்றன. வரும்காலங்களில் உலக வெப்பமயமாக்குவதலை தடுக்கும் பொருட்டு இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
          இதுமட்டுமின்றி மாணவர்களும் மரங்கள் வளர்ப்பதில் மிகுந்த பங்கு கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் சராசரி 5 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தால் அந்தப் பகுதியே பசுமையாக மாறுவதுடன் வருங்காலச் சந்ததியினருக்கு இந்தத்திட்டம் ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து விடும். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு நிறைவேறும் வகையில் அதிகளவு மரங்கள் நடவு செய்து பாதுகாத்து தங்கள் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி எடுத்து செயல்பட வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார்.
         பின்னர் வனத்துறையின் மூலம் 70,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கமாக 70 மரக்கன்றுகளை நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதேபோல் மாவட்டம் முழவதும் வனத்துறையுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து பெருமளவு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணியினை மேற்கொள்வார்கள் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வன அலுவலர்  மாரிமுத்து,   சிவகங்கை வனச்சரக அலுவலர்கள்  மணிவண்ணன்;,  மதிவாணன்,  கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து