முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிப்பறிவு மட்டும் இருந்து, சமூகநலனில் அக்கறை இல்லாதவர்கள் நாட்டிற்கு ஒரு சுமையாக கருதப்படுவார்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ். விமலா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மேலாண்மைப் புலம், அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவர்களுக்கான பட்டமளிக்கும் விழா  பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவானது இருகட்டங்களாக காலையும், மாலையும் நடைபெற்றது.
 காலையில் நடந்த முதல் நிகழ்வில், கலை மற்றும் மேலாண்மைப் புலத்தைச் சேர்ந்த 482 மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பட்டங்களை நேரில் வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ். விமலா   பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில், வள்ளல் அழகப்பரின் வள்ளல் தன்மையையும், அவருடைய தொலை நோக்குப் பார்வையையும் நனவாக்கும் வகையில், அழகப்பா பல்கலைக்கழகம் இன்று தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் உயர்கல்வி பற்றி குறிப்பிட்டு பேசும்பொழுது, இந்தியா பண்டைக்காலந்தொட்டே உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும், இதற்கு சிறந்த உதாரணம் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் என்றும் கூறினார்.  இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இன்று இந்தியாவில் 864 பல்கலைக்கழகங்களும், 40,000 கல்லூரிகளும் செயல்பட்டு வருவது பெருமைக்குரியது.
மேலும் அவர் பேசுகையில், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல பண்புகளும், ஒழுக்கமும் உள்ள குடிமக்கள் இருப்பது அவசியம். படிப்பறிவு மட்டும் இருந்து, சமூகநலனில் அக்கறை இல்லாதவர்கள் இருந்தால் அதனால் பயனில்லை. அவர்கள் நாட்டிற்கு ஒரு சுமையாக மட்டுமே கருதப்படுவார்கள். கல்வியின் நோக்கம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் குடிமக்களை உருவாக்குவதேயாகும். வெற்றி என்பது தானாகவே வராது. கடின உழைப்பின் மூலமே வெற்றியை எட்ட முடியும். தொடர்ந்து மேற்கொள்ளும் விடா முயற்சி நிச்சயம் வெற்றிக்கு வித்திடும் என்றார். மாறிவருகின்ற சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். படிப்பு என்பது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. படிப்பைவிட சிறந்த அணிகலன் வேறொன்றும் இல்லை எனக் குறிப்பிட்டு பட்டதாரிகளாகிய நீங்கள் தொடர்ந்து படித்து நல்ல நிலைக்குச் சென்று, தாங்கள் பயின்ற நிறுவனத்திற்கு பெருமைச் சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பிற்பகலில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், 657 மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பட்டங்களை நேரில் வழங்கினார்.
மிசோராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. கே.ஆர்.எஸ். சாம்பசிவ ராவ்   பிற்பகலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் தமது உரையில், இன்றைய நவீன உலகில் புதுமையான சிந்தனைகளையும், கருத்துக்களையும் கொண்ட நிபுணர்களையும், அறிஞர்களையும் உருவாக்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும், உலகம் முழுவதும் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களில் 20 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதும் பெருமைப்படத்தக்க வி~யம் என்றார். இந்திய மாணவர்கள் கடினமாக உழைக்ககூடியவர்களாகவும், எடுத்துக் கொண்ட துறையில் குறிக்கோளுடனும், மிகுந்த கவனத்துடனும், நேர்த்தியுடனும் செயல்படுபவர்களாகவும் உள்ளனர். கல்வித் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகளவில் ஏற்படக்கூடிய சவால்களை சந்திக்கக்கூடிய வகையில், இந்திய கல்வி நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவுகள், பாதுகாப்பு பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து நாடு முழுமையாக விடுபடுவதற்கு படித்த இளைஞர்கள் உதவி புரிய முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்களது கனவை நனவாக்குவதற்கு, மனதுக்கு பிடித்தவற்றை மிகுந்த ஆசையுடனும், குறிக்கோளுடனும் செய்து, வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.         
அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஹா. குருமல்லே~; பிரபு அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழகத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. பி. சுபாஷ் சந்திரபோஸ், பேரா. எஸ்.எம். இராமசாமி, பேரா. எ. நாராயணமூர்த்தி, பேரா. ஜெ. ஜெயகாந்தன் மற்றும் பேரா. கே. குருநாதன், தேர்வாணையர் பேரா. எஸ். சக்திவேல், நிதி அலுவலர் (பொ.) முனைவர் டி.ஆர். குருமூர்த்தி, பல்கலைக்கழக அதிகாரிகள், புல முதன்மையர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து