முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா:

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஸ்வயம் (இணைய வழிக் கல்வி) ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை எழுதுதல், உடனடி பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா பல்கலைக்கழக ஆட்சிக் குழுவக கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த போட்டிகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழு(UGC)  வின் “செயல்திட்டம் 17 இல் 17ஆம்” பரிந்துரைப்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் கட்டாயம் நடத்த வேண்டும்.  எனவே இந்த பரிந்துரையின்படி அழகப்பா பல்கலைக்கழகம் இப்போட்டிகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் நோக்கம் மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த படிப்போடு மட்டுமல்லாமல் உலகளாவிய நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஆகும் என துணைவேந்தர் தெரிவித்தார்.
  இந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.செந்தில் ராஜன், பல்கலைக்கழக ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். சி.பாஸ்கரன் மற்றும் துறைசார்ந்த ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து