முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது!

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் சரிவு ஏற்பட்டு ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 71.80 ரூபாய் ஆகியுள்ளது.

இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும். அதன்பின்பும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.38 ரூபாயை தொட்டது. நேற்று 42 பைசா சரிந்தது. இதனால் தற்போது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 71.80 ரூபாய் ஆகியுள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து