முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் திருக்கோவில் முன்பு தூய்மை விழிப்புணர்வு முகாம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,-விருதுநகர் மாவட்ட சுற்றுலா துறையின் சார்பாக  விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாhரியம்மன் திருக்கோவில் முன்பு உள்ள மைதானத்தில் ‘ தூய்மையே சேவை இயக்கம் “ தூய்மை சேவை வாரத்தின் நிகழ்வாக சுவாச் பாக்வாதா -2018     தூய்மை விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது.
 சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில், தூய்மை பாரதம் இயக்கத்தை அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.  திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை அடையும் நோக்கில். கழிவறை இல்லாதவர்களின் வீடுகளில் கழிவறை கட்டுதல், அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்தல், முக்கியமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழி பாட்டு தலங்களில் மக்களின் பங்கேற்புடன் தூய்மை செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த இயக்கத்தில் மேற்கொள்ளப்படும்.
 
 இதன் தொடக்கமாக “தூய்மையே சேவை இயக்கம்“ விழிப்புணர்வு பேரணி உறாஐp.பி.செயத்  முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு  அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் உறாஐp.பி.செயத்  முகமது ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்,  நாட்டு நலபணித்திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்கம் மாணவர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து  விருதுநகரில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருக்கோவில், வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில்  தூய்மை விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.  இம்முகாமில் உறாஐp.பி.செயத் முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்கம் மாணவர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அருள்மிகு ஸ்ரீபராசக்தி மாhரியம்மன் திருக்கோவில் முன்புள்ள வளாகம்  தூய்மைபடுத்தப்பட்டது. 
 மேலும்,  தமிழ்நாடு அரசு, மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக விருதுநகர், நகராட்சிக்கு 5 குப்பை தொட்டிகளும், ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருக்கோவில், வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு திருக்கோவிலுக்கு 2 குப்பை தொட்டிகளும் வழங்கப்பட்டது. 
 முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர்  .த.தட்சிணாமூர்த்தி ம மற்றும் நகராட்சி  துப்புரவு  பணியாளர்கள், மாணவர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து