Idhayam Matrimony

புதிய பேருந்துகள் துவக்க விழா

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      சிவகங்கை
Image Unavailable

         சிவகங்கை-  சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம், சிவகங்கை போக்குவரத்துக் கழக பணிமனையின் மூலம் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் அவர்கள் புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்ததுடன் மேலும் தெரிவிக்கையில்,
        தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பயணங்கள் காலதாமதமின்றி இருந்திட ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் புதிய பேருந்துகளை இயக்க உத்தரவிட்டு போக்குவரத்துத்துறையின் மூலம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய பேருந்துகளை மாண்புமிகு முதல்வர் வழங்கியதுடன் தற்பொழுது பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக இன்று அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டலத்திற்கு 19 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டதுடன் அந்தப் பேருந்துகள் மாவட்டத்திலுள்ள கிளை போக்குவரத்து நிலையங்களிலிருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களும் உருவாக்கி தரப்படும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; தெரிவித்தார்.
        முன்னதாக வட்டாரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வாகனம் இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்  குறித்த விளம்பர பதாகைகளை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் ஓட்டுநர்களுக்கு வழங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
        இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக கழக மண்டல மேலாளர் செல்வகோமதிகுமார், மண்டல மேலாளர் (வணிகம்) சிவலிங்கம், கோட்ட மேலாளர் அழகர்சாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர், அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், கிளை மேலாளர் இராஜ்குமார், கண்காணிப்பு அலுவலர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கருணாநிதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், பலராமன், அய்யனார், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து