முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217-வது நினைவு விழா துணை முதல்வர் - 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 217-வது நினைவு தினத்தையொட்டி மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் , உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டப வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
              பின்னர், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
             இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் திருமதி.ஆஷா அஜீத்,இ.ஆ,ப., மற்றும் முக்கியப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
            இவ்விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கருப்பணராஜவேல், திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து