முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 53 நாட்களில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.10.45 குறைந்தது

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் கடந்த 53 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது.

குறைய தொடங்கியது

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.05-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி உச்சத்தின் உச்சமாக பெட்ரோல் விலை ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1.50-க்கு குறைத்தது. இதனால் மராட்டியம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான தங்களது வரியையும் சற்று குறைத்தன. இதனால் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.

வாகன ஓட்டிகள் ஆறுதல்

சென்னையில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 53 நாட்களில் ரூ.10.45 குறைந்து நேற்று முன்தினம் ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ரூ.79.79-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.7.02 குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து