முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

துலூஸ், உலகிலேயே மிகப் பெரிய விமானமான சூப்பர் ஜம்போ ஏ 380 ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.

ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ். உலகிலேயே மிகப் பெரிய விமானமான சூப்பர் ஜம்போ ஏ 380 ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது. 500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட சூப்பர் ஜம்போ ஏ 380 விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், சூப்பர் ஜம்போ ஏ 380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சூப்பர் ஜம்போ ஏ 380 விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்து விட்டதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து