முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை :  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் இடம் பிடித்துள்ளார். மேலும், டி-20 போட்டிகான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை.

புவனேஸ்வர் குமார்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

டி20 தொடர்உடன் முதல் இரண்டு போட்டி, கடைசி மூன்று போட்டிக்கான என இரண்டு விதமாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிக்கான அணயில் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை. கடைசி மூன்று போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: 1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. சித்தார்த் கவுல், 15. கேஎல் ராகுல்.

முதல் 2 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: 1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. கேஎல் ராகுல்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் ஷுப்மான் கில்லும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள்: 1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. விஜய் சங்கர், 10. சாஹல், 11. பும்ரா, 12. உமேஷ் யாதவ், 13. சித்தார்த் கவுல், 14. மயாங்க் மார்கண்டே, 15. ஷிகர் தவான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து