அருணாச்சலில் 2 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

புதன்கிழமை, 27 மார்ச் 2019      அரசியல்
bjp office newdelhi

இம்பால், அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் முன்பாக பா.ஜ.க.வை வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

ஏப். 11-ல் வாக்குபதிவு

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அருணாச்சலில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 4 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

போட்டியின்றி தேர்வு

சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிந்தது. வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள். இந்த நிலையில், அங்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிருக்கும் எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர். வேட்பு மனு தாக்கல் முடிவடைந்ததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இது குறித்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து