முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குகளை உறுதி செய்யும் இயந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிரித்து அனுப்பும் பணி

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை,-  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை  வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மானாமதுரை(தனி) இடைத்தேர்தலுக்கும் விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் இயந்திரத்தை  அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா   தலைமையில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
 மாவட்ட வருவாய் அலுவலர் செய்திகுறிப்பில் தெரிவித்தாவது.
சிவகங்கை மாவட்ட வருகின்ற நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் இயந்திரத்தை  பிரித்து அனுப்பும்ப் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 452 இயந்திரமும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 438 இயந்திரமும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 456 இயந்திரமும், மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 421 இயந்திரமும் மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 437 இயந்திரமும். ஆக மொத்தம் 2204 பதிவான வாக்குகளை உறுதி செய்யும் இயந்திரத்தை விகிதாசார அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர்   செல்வகுமாரி, வட்டாட்சியர்கள் உட்பட்ட அரசு அலுவலர்கள் பணி மேற்கொண்டனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து