முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகப்பரின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு சிலப்பதிகாரத்தின் நாட்டிய நாடக நிகழ்ச்சி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.- காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய வள்ளல் டாக்டர் சு.ஆ.அழகப்ப செட்டியாரின் 110 வது பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் மற்றும் அழகப்பா குழும உறுப்பினர்கள் சார்பில் அழகப்பர் திருவிழாவாக மிகச்சிறப்பாக ஏப்ரல் 6, 2019 காரைக்குடி பவ்நகர் அரங்கில் கொண்டாப்பட்டது இச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியில் தன் அர்ப்பணிப்பை நல்கி தொடக்கப்பள்ளி முதல் தொழில் கல்வி வரை உருவாக்கி அரும்பெருந் தொண்டாற்றிய அழகப்பா செட்டியார்க்கு ஒரு அர்பணிப்பு விழாவாக கொண்டாப்பட்டது. அவரது தன்னலமற்ற தொண்டினால் உலகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வியை அவர்களது வீட்டின் வாயிலிலேயே கிடைக்கச்செய்தார். அதனால் இன்று 30,00,000 கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகி இச்சமுதாயத்திற்கு அவர்கள் தங்கள் பங்கினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அழகப்பார் திருவிழா அன்று 30 கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் அழகப்பா செட்டியாரின் புகைப்பட கண்காட்சி உணவு கூடங்கள், புத்தக கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு சவாரிகள் போன்றவை இடம்பெற்றன. இந்த திருவிழாவில் முக்கிய சிறப்பம்சமாக ஜம்பெரும்கர்ப்பிங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இளவரசராய் இருந்து ஏற்றமிகு புலவராய் புகழ்பெற்ற இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற இந்த புராண காவியத்தை தன்னுடைய அற்புத பாடல் திறந்தாலும் உணர்வூட்டும் இயக்கத்தாலும் பிரமாண்டமான வகையில் மெய் சிலிர்க்கும் நிகழ்ச்சியாக நாட்டிய பேரரசு மதுரை சு.முரளிதரன் உருவாக்கி வழங்கினார்.
இந்த நாட்டிய நிகழ்ச்சி இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தை சார்ந்தது ஆகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சோழப்பேரரசின் கீழிருந்த காவேரிப்பூம்பட்டினத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் இக்காவியத்தின் கண்ணகியும் கோவலனும் இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அரங்கில் பிரமாண்டமாக டிஜிட்டல் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு முதல் நூற்றாண்டில் நிகழ்;த இக்காவியத்தை பார்வையாளர்களின் கண்முன் நேரலையாக நிகழ்த்;தபட்டது. இந்த நாட்டிய நாடகத்தில் கலைமாமணி உமா முரளிதரன் கண்ணகியாகவும், காவியா முரளிதரன் மதாவியாகவும், மதுரை சு.முரளிதரன் கோவலனாகவும், சிவகுமார் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆகவும், செல்வி தேவி அலமேலு வைரவன் பாண்டிய மகாராணியாகவும் வேடமேற்ற முக்கிய கலைஞர்கள் ஆவர்.
இந்த நடனமானது அரங்கில் அமைதியையும், பிரமிப்பையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி அனைவரையும் அக்காவியத்தில் திளைக்கச் செய்தது. முன்னதாக காரைக்குடி தமிழிசை சங்கத் தலைவரும் அழகப்பா கல்வி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் திரு. ராமநாதன் வைரவன் அவர்கள் அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு வரவேற்புரை வழங்கினார். இந்த திருவிழாவில் 7500 கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வெளியிட்ட நினைவுமலர் கையேட்டினை பள்ளத்தூர் தொழில் அதிபர் திரு.பழ.படிக்காசு மற்றும் திரு.வி.சேதுராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவ்விழாவில் பங்கு பெற்ற நடன கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அரங்க அமைப்பார்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. இந்த நிகழ்சியானது அழகப்பா செட்டியாரால் உருவாக்கப்;பெற்ற அழகப்பா கல்வி குழுமத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவும் எழுச்சி பெறவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திதந்துள்ளது. இறுதி நிகழ்வாக காரைக்குடி தமிழிசை சங்கத்தின் செயலாளர் திரு சுந்தரராமன் அவர்கள் இந்த விழாவிற்கு நன்றியுரை வழங்கி நிகழச்சி நிறைவுபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து