முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத் துறை விடுத்த எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்தன. இதே போன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்த போதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது. இந்தியா எச்சரிக்கை விடுத்தும், அதிகாரிகள் போதிய கவனம் தராததால் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து