முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழு கோபுரங்களுடன் கட்டப்படவுள்ள இந்து கோவிலுக்கான பூமிபூஜை நடந்தது - அபுதாபியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : அபுதாபியில், முதல் இந்து கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட ஏழு அமீரகங்களில், நம் நாட்டைச் சேர்ந்த, ஏராளமான இந்துக் கள் வசிக்கின்றனர். அபுதாபியில், மசூதிகளை தவிர, 40 தேவாலயங்கள் மற்றும் இரண்டு சீக்கிய குருத்வாராக்கள் மட்டுமே உள்ளன. கோவில் இல்லாமல் இருந்தது.

கடந்த, 2015-ல், பிரதமர் நரேந்திர மோடி இங்கே வந்த போது, அபுதாபியில், இந்து கோவில் கட்டுவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில், அபு முரீக்கா என்ற இடத்தில், இந்து கோவில் கட்டுவதற்கு, அந்நாட்டு அரசு 14 ஏக்கர் நிலத்தை வழங்கியது. கோவிலின் கட்டுமான பணிகள், இந்து சமய மற்றும் சமூக பணிகளை செய்து வரும் பாப்ஸ் எனப்படும், போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்களுடன் கோவில் கட்டப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சிலைகள் மற்றும் கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் வடிவமைக்கப்பட்டு அபுதாபிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. சுவாமி நாராயண் அமைப்பைச் சேர்ந்த தலைமை மஹந்த், சுவாமி மஹாராஜ் தலைமையில், அஸ்திவாரம் அமைப்பதற்கான, பூமி பூஜை நடந்தது. இதில், அந்நாட்டுக்கான இந்திய துாதர் மற்றும் அமைச்சர்களுடன், ஆயிரக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து