கேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2019      அரசியல்
Rahul  road show in  Kerala 2019 06 07

வயநாடு, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு ராகுல்காந்தி ரோடு ஷோ நடத்தி நன்றி தெரிவித்தார்.
 
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.  இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி கேரளாவில் ரோடு ஷோ நடத்துகிறார்.

டெல்லியில் இருந்து நேற்று பகல் 2 மணிக்கு புறப்பட்ட ராகுல், ஹரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தார். தொடர்ந்து திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அதன் பிறகு காளிக்காவூர் சென்ற ராகுல்காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ரோடு ஷோக் களில் ராகுல்காந்தி பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து