முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் தினசரி நூலகங்களுக்கு சென்று படிக்க வேண்டும்: அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      சிவகங்கை
Image Unavailable

  காரைக்குடி :-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நேற்று முன்தினம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. 
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஹா.குருமல்லே~;பிரபு தமது வரவேற்புரையில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அழகப்பா பல்கலைக்கழகம் அடைந்துள்ள பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் இடம் பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அவர் தமது உரையில், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களிலிருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 44 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள 44 துறைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.  மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமானது இக்கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இப்புதிய பாடத்திட்டத்தில் பயில இருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என்றார்.   ரூசா 2.0 திட்டத்தின் கீழ் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் பத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் சிறந்த தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது.  இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்த பாடுபட வேண்டும் என்றார்.  இந்த அனைத்து செயல்பாடுகளின் சீரிய நோக்கம் அழகப்பா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியின் தரத்தை உலக பல்கலைக்கழகங்களுக்கு இணையாக கொண்டுவருவதோடு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் செம்மையை அடைவதே ஆகும் என்றார்.
 அவர் மேலும் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி மாணவர்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும்.  அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.  குறிப்பாக மாணவர்கள் குழுவிவாதத்தில் ஈடுபட உதவ வேண்டும் என்றார்.  மாணவர்கள் தினசரி நூலகங்களுக்கு சென்று படிக்கவும் அதோடு மேலும் தங்களது பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் நூலகங்களிலிருந்து எடுத்து வாசிப்பதையும் ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார். மேலும் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த புத்தாக்கப்பயிற்சியில் “கற்றல் ஆதாரங்கள்” என்ற தலைப்பில் முனைவர் எஸ்.தனு~;கோடி, “போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி” என்ற தலைப்பில் முனைவர் பி.சுரே~;குமார், “கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி உதவித் தொகை மற்றும் வங்கி கடன்கள்” என்ற தலைப்பில் முனைவர் எஸ்.சந்திரமோகன், “தேர்வுகள்” என்ற தலைப்பில் முனைவர் கே.உதயசூரியன், “ஸ்வயம்” என்ற தலைப்பில் முனைவர் சி.பாஸ்கரன், “ஆய்வக வசதிகள்” என்ற தலைப்பில் முனைவர் கே.சங்கரநாராயணன், “கலைப்பாடங்களின் நோக்கம்” என்ற தலைப்பில் முனைவர் கே.ஆர்.முருகன், “பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் முனைவர் கே.மணிமேகலை, “மாணவர்கள் தகுதி வளர்ப்பு” என்ற தலைப்பில் பேரா.அய்யம் பிள்ளை, “யோகா” என்ற தலைப்பில் முனைவர் எஸ்.சரோஜா, “ஸ்டார்ட் அப்ஸ்” என்ற தலைப்பில் முனைவர் பி.தர்மலிங்கம், “மென்திறன்கள்” என்ற தலைப்பில் முனைவர் பி. மதன், “கலைத்திறன் செயல்பாடுகள்” என்ற தலைப்பில் முனைவர் எம். ஜோதிபாசு முதலானோர் உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்;. முனைவர் வி. பழனிச்சாமி, முதன்மையர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து