முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.ராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் வளாகப் பாதுகாவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.
இந்த ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயரம் கொண்ட பாலிகான் கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு அதில் 20 அடி உயரம் 30 அடி நீளம் கொண்ட மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது அவர் தமது உரையில் இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தேசிய தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு எல்லா துறைகளிலும் முன்னேறி வெற்றி நடைபோடுகிறது.  பரந்த நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை எவ்வாறு ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் இந்தியாவில் கலாச்சார ஒற்றுமை பல ஆண்டுகளாக இருந்து வந்ததேயாகும்.  சுதந்திர போராட்ட வரலாற்றில் பாலகங்காதர திலகர், சுப்ரமணிய பாரதி, மகாத்மா காந்தி போன்றோர்களது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.  நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.  சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது, அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம் முக்கிய இடம் பெறுகிறது.  இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 17500 தியாகிகள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டனர் என்றும் அவர்களில் 250 பேர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.  தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் விரைவில் நடத்தப்பட உள்ளது என்றும், காந்திய படிப்பு துறையும் துவங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
 மேலும் அவர் பேசுகையில், தேசிய மாணவர் படை பிரிவு 9வது பட்டாலியன் காரைக்குடி சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை பிரிவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தானாக முன்வந்து இப்படை பிரிவில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டின் இறையாண்மையை காப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் முக்கிய கடமையாகும்.  கல்வி நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படும் படிப்பு சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் அதற்கேற்றாற் போல் இளைஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.  இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அதன் மக்கள் தொகை 30 கோடி தற்போது அது 135 கோடியாக உயர்ந்துள்ளது.  மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படவும், தேசத்தின் ஒற்றுமையை காத்து நாட்டின் வளர்ச்சி ஏற்படவும் பாடுபட வேண்டுமென இளைஞர்களை கேட்டுக்கொண்டார். 
 இந்நிகழ்ச்சியில், 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் தன் இன்னுயிர் நீத்த கார்கில் நாயகன் திரு.தங்கவேலு அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது துணைவியார் திருமதி.இன்பவள்ளி அவர்களுக்கும் மற்றும்  2017-ஆம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தன்னுயிர் நீத்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திரு.இளையராஜா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில்  திருமதி.செல்வி அவர்களுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னாடை மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
 இந்நிகழச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவினர், பதிவாளர் பேரா.குருமல்லேஷ் பிரபு, தேர்வு நெறியாளர் பேரா.உதயசூரியன், நிதி அலுவலர் பேரா.சந்திரமோகன், முதன்மையர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.சுந்தர், உடற்கல்வி இயக்குனர் முனைவர் செந்தில்குமரன் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து