முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி ஜ.கா.நி.மே.நி.பள்ளி மைதானத்தில்- குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      தேனி
Image Unavailable

போடி, -   போடியில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்  ஜ. கா. நி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
     பாரதியார் பிறந்த தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான சி ஜோன் குறுவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகள் போடி ஜ.கா.நி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 23 பள்ளிகளை சேர்ந்த 670 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
     கால்பந்து, வலை பந்து, கபடி, சதுரங்கம், கேரம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் தொடக்க விழா தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.  முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி, உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திருப்பதி, தேனி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கூறுகையில், தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. காலணி முதல் மடிக்கணினி வரை இலவசமாக வழங்கி வருகிறது. மடிக்கணினி தயாரிக்கும் நாடாக ஜப்பான் திகழ்ந்து வருகிறது. அந்த நாட்டிலேயே மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுவதில்லை.
     ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது.  மாணவர்களின் நலன் கருதி கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மாணவர்கள் அறிவுத்திறனை வளர்க்கவும், தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், தேர்வு செய்யவும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  தகுதியும், திறமையும் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட, மாநில, தேசிய அளவில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
      இந்நிகழ்ச்சியில் ஜ.கா.நி. முப்பள்ளிகளின் தலைவர் வடமலைராஜைய பாண்டியன், செயலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் சத்தீஸ்குமார்,  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அழகுகுமார், ஞானம், சரவணன், வடமுலு, மாரிமுத்து, காளிமுத்து மற்றும் ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜ.கா.நி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மகராஜ் வரவேற்றார். துணை முதல்வர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து