முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் தலைமையில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை தின விழா

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      தேனி
Image Unavailable

தேனி -தேனி மாவட்டம், தேனியில் பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் தலைமையில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சென்னை தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் பாலசுதாகரி வரவேற்றார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மையர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது தென்னையின் வேர் முதல் இலை, காய் வரை அனைத்தும் மனித சமுதாயத்திற்கு இறைவனுக்கு படைக்கும் பொருளாக, உணவாக, மருந்தாக, பொருளாதார உயர்வுக்காக  பயன்படுகிறது. தற்போது தென்னையிலிருந்து நீராபாரனம் தயாரிக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.  மத்திய அரசும், புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில்  நடைபெற்று வருகின்ற அம்மா அரசும் விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை, உதவிகளை, சலுகைகளை வழங்கி வருகின்றன. தென்னை சாகுபடியில் கர்நாடக, கேரளா மாநிலங்கள் முதலிடத்தில் இருந்தாலும், விளைச்சலில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. தென்னையின் மூலம் ஆண்டுக்கு 7000ம் கோடி தேசிய வருமானமும், 500 கோடி அன்னிய செலவானியும் கிடைக்கிறது. தமிழகத்தில் தென்னை சாகுபடி மற்றும் விளைச்சலில் தேனி மாவட்டம் முதல் மாவட்டமாக திகழ ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மா விளைச்சல் அதிகமாக இருக்கும் தேனி மாவட்டத்தில் மா பதப்படுத்தும் நிலையம் அமைக்க மத்திய விவசாய துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். அதேபோல் தென்னை விவசாயிகளுக்கான பிரச்னை குறித்தும் பாராளுமன்றத்தில் எடுத்து வைப்பேன். தேனி மாவட்டத்தில் தென்னைக்கான இன்குபேட்டர் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார். தேனி தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் அதற்கான நிதியுதவி குறித்து பாலசுதாகரியும், தென்னையின் சீரிய சாகுபடி தொழில்நுட்பம் குறித்து ஜான்சிராணியும், நாற்றுப்பண்ணை பராமரித்தல் மற்றும் பயிர்முறைகள் குறித்து சித்ராவும், பூச்சி மேலாண்மை குறித்து கண்ணன், நோய் மேலாண்மை குறித்து பிரபு ஆகியோரும் விளக்கினர். இவ்விழாவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து