முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டையில் வேப்பமரத்தில் பால் வடிந்ததாக பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி சென்றனர்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல். - திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 40 அடி உயரம் கொண்ட வேப்பமரத்தில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து  வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வடிந்தது கொண்டே இருந்தது அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் சுற்றுவட்டாரப் கிராமப்பகுதி  பெண்கள் என ஏராளமானோர் வந்து அந்த வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றியும் சந்தன குங்குமம் சாத்தியும் பத்தி சூடம் கொளுத்தி பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.
மேலும் அவ்வாறு வந்து வணங்கி சென்ற சில பெண்களுக்கு திடீரென சாமி வந்து ஆடினார்கள் அதில் ஒரு பெண்  இந்த மரத்தில் மாரியம்மன் குடி இருப்பதாகவும் இப்பகுதியை சுத்தப்படுத்தி இந்த மரத்தை சுற்றி கோவில் அமைக்க வேண்டும் எனவும் கூறினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து