முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
 அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 5 பயனாளிகளுக்கு காதுக்குப் பின் அணியும் காதொலிக்கருவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும் வழங்கினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாத வகையில் அவர்களுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடத்தில் மாவட்ட கலெக்டர் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  மேலும், இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கிய அனைத்து நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து