முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பி.கே.என் கலை-அறிவியல் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக டி-பிரிவு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி:

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக டி-பிரிவு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.இந்த போட்டியின் துவக்க விழாவிற்கு திருமங்கலம் பி.கே.என் கல்லூரி தலைவர் இரா.விஜயராஜன் நாடார்,செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி நாடார்,பொருளாளர் பி.டி.என்.ஏ.அசோக்குமார் நாடார் ஆகியோர் தலைமை வகித்தனர்.கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஆர்.கணேசன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் உடற்கல்வியியல் துறையின் இயக்குனர் டாக்டர்.டி.முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.திரளான கல்லூரி மாணவ,மாணவிகள் முன்னிலையில் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்ற இந்த டி-பிரிவு மண்டல அளவிலான போட்டிகளில் ஆறு கல்லூரிகள் பங்கேற்று பலப் பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் திருமங்கலம் பி.கே.என் கல்லூரி சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டி வரை முன்னேறிச் சென்றது.இதனை தொடர்ந்து பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிவகாசி அன்ஜாக் கல்லூரியும் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியும் மோதின.இந்த பரபரப்பான ஆட்டத்தில் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி வீரர்கள் சிறப்புடன் விளையாடி வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்றனர்.இதனிடையே வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் நடைபெறவுள்ள மண்டல அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பல்கலைக்கழக டி-பிரிவு மண்டல அணியின் சார்பில் பங்கேற்று விளையாடுவதற்கு திருமங்கலம் பி.கே.என் கல்லூரி கூடைபந்து அணியினைச் சேர்ந்த பி.வேல்முருகன்,எஸ்.ஜெகதீசன்,கே.ஸ்ரீகணேஷ் ஆகிய 3பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து