முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி இந்தியா வருகிறது

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு சிறந்த வகையில் தயாராகும் வகையில் இந்திய அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாட இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் எல்லா அணிகளும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு டி20 போட்டிக்கான அட்டவணையை தயார் செய்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியா வந்து விளையாடுகிறது. தற்போது இலங்கை அணியும் இந்தியா வந்தால் போட்டி அட்டவணையை தயாரிக்க இந்தியாவுக்கு கடினமான நிலை ஏற்படும். ஆனால் ஒரு வாரத்திற்குள் மூன்று போட்டிகளையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா - இலங்கை இடையில் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து