முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக கெய்ரன் போலார்ட் நியமனம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஜமைக்கா : ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்டு நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஜேசன் ஹோல்டர் நீடிக்கும் நிலையில், ஒரு நாள் போட்டிகளில் அவரது கேப்டன் பதவி போலார்டு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல டி20 போட்டிகளுக்கான கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டித் தொடர் நடக்க உள்ள நிலையில், போலார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அவருக்கு நட்சத்திர வீரர்கள் டுவைன் பிராவோ, சாமுவேல் பத்ரீ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், போலார்டு தலைமையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நவம்பர் 5-ம் தேதி தனது முதல் சவாலை போலார்டு எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து