முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ கால்பந்து தகுதி போட்டிகளில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ சாதனை

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

லிதுவேனியா : ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்று சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

லிதுவேனியா அணிக்கு எதிரான யூரோ 2020 கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 4 கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்கு 5-1 என்ற வெற்றியை பெற்றுத் தந்தார். இதன் மூலம் ராபி கீன் என்ற வீரர் அடித்த 23 கோல்கள் சாதனையை முறியடித்து 25 கோல்கள் என்ற சாதனையை நிகழ்த்தினார் ரொனால்டோ. கீன். இது குறித்து தன் இன்ஸ்டாகிராமில் விளையாட்டாகக் கூறும் போது,

நீங்கள் நிறைய சாதித்து விட்டீர்கள். இந்த சாதனையையாவது எனக்கு விட்டு வைக்கக் கூடாதா? என்று பதிவிட்டுள்ளார். லிதுவேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் கோலை பெனால்டி ஸ்பாட் கிக் மூலம் அடித்த ரொனால்டோ மேலும் 3 கோல்களை அடித்து தன் மொத்த சர்வதேச கோல்களை 93 ஆக அதிகரித்துள்ளார். மேலும் ரொனால்டோவின் 8-வது சர்வதேச கால்பந்து ஹாட்ரிக் சாதனையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து