முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு அக். 15 முதல் அமல் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரால் இரண்டு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன. இதனால் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியானது 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனாவில் 70-வது தேசிய தினம் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாட இருப்பதால் கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியூஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து அதனை ஏற்று நல்லெண்ண நடவடிக்கையாக கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில், அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று  டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க சீனா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாத மத்தியில் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து