வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      அரசியல்
Rajendra Balaji 2019 05 09

வெள்ளை அறிக்கை மட்டுமல்ல,  கலர், கலராக கூட அறிக்கை கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலினுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதில் அளித்துள்ளார்.

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெறுங்கையோடு திரும்பியுள்ளார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே என கேட்டதற்கு, ஸ்டாலினை தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள். எடப்பாடி வெளிநாட்டுக்கு சென்று 8850 கோடி அளவில் தமிழகத்தில் முதலீட்டை ஈர்த்துள்ளார். எடப்பாடியின் முடிவை தமிழகத்தின் வளர்ச்சியை அனைவரும் போற்றுகிறார்கள். பொறாமை, இயலாமை தங்களால் முடியாததை எடப்பாடி செய்து விட்டார். 23 ஆண்டு கால வரலாற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து நாடுகளுக்கும் சென்று தொழில் முதலீட்டை பெற்றுள்ளார். ஸ்டாலினை தவிர அனைவரும் வரவேற்கிறார்கள்.

எவ்வளவு முதலீடு என்பதை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை, பச்சை அறிக்கையும் கூட கொடுப்போம்.  ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காயும் கொடுப்போம். துபாய்க்கு சென்ற போது நடுஇரவிலும்  வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் அனைவரும் எங்களை வரவேற்றார்கள். முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கை ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. செம்மொழி மாநாட்டை போல் மெரினாவில் திரிந்தவர்களை் எல்லாம் கோட் சூட் போட்டு உட்கார வைத்தது போல இல்லாமல் உண்மையான தொழிலதிபர்கள் கலந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து