முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது டெல்லி கோர்ட்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது. டெல்லி அருகாமையில் உள்ள குர்கான் மற்றும் பிகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதே போல லண்டனில் 19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை சட்ட விரோதமாக வாங்கியதிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு வதேரா மீது உள்ளது. இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தார். அவர் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வியாபார விஷயமாக வெளிநாடு செல்லவுள்ளதால் இதற்காக டெல்லி கோர்ட்டில் அனுமதி கோரி அவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், வரும் 21-ம் தேதியில் இருந்து அக்டோபர் 8-ம் தேதி வரை ராபர்ட் வதேரா ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து