முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. உலக அளவில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. இந்த நிலையில், டெல்லியில் குளிர் காலத்தில் மீண்டும் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டிவிடாமல் தடுக்கும் நோக்கில், வரும் நவம்பர் 4 முதல் 15-ம் தேதி வரை மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

வாகன கட்டுப்பாட்டு திட்டத்தின் படி ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றை எண்கள் கொண்ட கார்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். அதே போல், இரட்டைப்படை எண்கள் கொண்ட தேதிகளில் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதால், டெல்லியில் ஏற்படும் கடுமையான காற்று மாசை குறைக்க 7 அம்சங்கள் கொண்ட திட்டத்தையும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மாஸ்க்குகள் வழங்குவது, சாலைகளை இயந்திரம் மூலமாக சுத்தப்படுத்துவது, மரங்கள் நடுவது உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து