முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த ஜோ ரூட்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்று முன்தின முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 57 ரன்னும், ஜோ பேர்ன்ஸ் 47 ரன்னும் எடுத்தனர். பட்லர் 64 ரன்னும், லீச் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இங்கிலாந்து கேப்டன் 35 ரன் எடுத்து இருந்த போது டெஸ்டில் 7 ஆயிரம் ரன்னை தொட்டார். அவர்  85 டெஸ்டில் 157 இன்னிங்சில் 7022 ரன் எடுத்து உள்ளார். இதில் 16 சதமும், 44 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார். 7 ஆயிரம் ரன்னை எடுத்த 12-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார். குறைந்த இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது இங்கிலாந்து வீரர் ஆவார்.

ஹேமந்த் 131 இன்னிங்சிலும், பீட்டர்சன் 150 இன்னிங்சிலும், அலைஸ்டர் குக் 151 இன்னிங்சிலும் 7 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தனர். மேலும் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 3-வது சர்வதேச வீரர் ஜோ ரூட் ஆவார். அவர் 28 வயது 256 நாட்களில் இந்த ரன்னை எடுத்தார். குக் 27 வயது 346 நாட்களிலும், தெண்டுல்கர் 28 வயது 193 நாட்களிலும் 7 ஆயிரம் ரன்னை தொட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து