முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 ஆயிரம் கோடியில் வீடு கட்டும் திட்டம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தொழில் மற்றும் ஏற்றுமதியை ஊக்கவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டி வழங்கிட ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களை வெளியிடுகிறோம். ஏற்றுமதியை ஊக்கவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகினறன. பணவீக்கம் குறைவாக, கட்டுப்பாட்டில் உள்ளது. 4 சதவீதத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. முதலீடு அதிகரித்து கொண்டு செல்கிறது. இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. உற்பத்தி துறையில் ஏற்பட்ட சிறு சறுக்கலை சரி செய்ய முயற்சி செய்யப்படுகிறது.

பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகிறது. பகுதி கடன் உறுதி திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்து வருவதற்கான அறிகுறி தெரிகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது. நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. தொழில் நடைமுறைகள் எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 5 முக்கிய துறைகளில் பொருட்கள் நுகர்வு குறைந்துள்ளது.

தொழில்துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை 19-ம் தேதி சந்திக்க உள்ளேன். சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி சலுகை அதிகரித்துள்ளது. வரா கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வங்கிகளுக்கான வரவு சீராக உள்ளது. வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்படும். வரி செலுத்துவதில் சிறு தவறுக்கான தண்டனைகள் நீக்கம். உற்பத்தி துறை மீண்டு வருகிறது. சிறுகுறு தொழில் முனைவோருக்கான காப்பீடு அதிகரிக்கப்படும். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜனவரி 1-ல் துவங்கப்படும். 2020-ல் நான்கு இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து