முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் நேராக ஒகனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. பாது காப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப் பட்டது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது. நேற்று முன்தினம்  21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது. ஆனால் நீர் மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்திற்காக தற்போது 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத் திற்காக 900 கன அடி தண்ணீ ரும் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்து சரிந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 120.26 அடியாகவும், நேற்று காலை 120 அடியாகவும் குறைந்தது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து