முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும் - மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும். இந்தி மொழியை நம்முடைய அன்றாட பணிகளில் அதிகமாகப் பயன்படுத்தி மகாத்மா காந்தி,  சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான நேற்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. இந்தி நாள் நேற்று  கொண்டாடப்பட்டதையொட்டி பா.ஜ.க. தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டுவிட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும். நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும். ஒரு மொழியான இந்தியால் மட்டும்தான் மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், இந்தியை விரும்புவோம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழி இந்திதான். அனைத்து எழுத்தாளர்கள்,  கவிஞர்கள்,  பத்திரிகையாளர்கள்,  இந்தி மொழிக்கு சேவையாற்றியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தி தின வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து