முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் தொடங்கப்படவுள்ள விளையாட்டு பல்கலைக் கழக வேந்தராக கபில் தேவ் நியமனம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சண்டிகர் : அரியானாவில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரியானா மாநிலத்தில் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைகழகம் நிறுவுவதற்கான அனுமதியை கடந்த ஜூலை மாதம் அம்மாநில அரசு வழங்கியது. இந்நிலையில், அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள மாநில விளையாட்டு பல்கலைக் கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்படுவார் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து