முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மசாலாவில் இன்று முதல் டி20: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடர் (3-0), ஒருநாள் தொடர் (2-0) மற்றும் டெஸ்ட் தொடரை (2-0) கைப்பற்றியது. இதனால் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட்கோலியின் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 0-2 (கடந்த பிப்ரவரி மாதம்) என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் கவனமுடன் விளையாட வேண்டிய நிலை உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் விளையாடிய அதே பேட்டிங் வரிசையில் இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வரிசையில் ரோகித்சர்மா, தவானும், 3-வது, 4-வது, 5-வது வரிசையில் கோலி, ரி‌ஷப்பந்த், மனீஷ் பாண்டே ஆகியோரும் ஆடுவார்கள்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பி இருக்கிறார். குர்ணல் பாண்டியா அல்லது ஜடேஜா கழற்றிவிடப்பட்டு அந்த இடத்தில் அவர் இடம் பெறலாம். வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹருக்கும், கலீல் அகமதுவுக்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் நவ்தீப் சைனியும் போட்டியில் உள்ளார். சுழற்பந்து வீரர்களில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய நான்கு 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருந்தது. ஜிம்பாப்வேயை 2-0 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், இலங்கையை 3-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் குயின்டன் டிகாக், மில்லர், டூசன், பரிடோரியஸ், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ஷிரேயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரி‌ஷப்பந்த், லோகேஷ் ராகுல், குர்ணல் பாண்ட்யா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், கலீல் அகமது, ஜடேஜா, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டன் டிகாக் (கேப்டன்), டேவிட் மில்லர், வான்டர் டுசன், பவுமா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், பிஜோன் போர்ட்டூன், புரன் ஹென்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, சுமுட்ஸ், பிரிட்டோரியஸ், ரபடா, பெகுல்வாயோ, ஜூனியர் டாலா, தபரிஸ் ‌ஷம்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து