முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவுமே தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை :  ஸ்டாலினுக்கு  வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்   கடுமையாக தாக்கி பேசினார்.

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் தலைமை தாங்கினார், ஒன்றிய கழக செயலாளர்கள் மகாலிங்கம், அன்பழகன், நகர செயலாளர் விஜயன், பேரூர் கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் சேர்மன்கள் ஆண்டிச்சாமி, மாணிக்கம், தமிழழகன், பாவடியான், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமை கழக பேச்சாளர்கள், சுறு, சுறு சுப்பையா, ஏ.ஜெ.ஏங்கல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பெரியபுள்ளான்(எ)செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் மற்றும் இக்கூட்டத்தில்  கழக அமைப்பச்செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகளய் பஞ்சவர்ணம், பஞ்சம்மாள், மாவட்ட அணிச்செயலாளர்கள் வேலுச்சாமி, போத்திராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், பிச்சைராஜன், ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் கொரியர்கணேசன், பாப்புரெட்டி, குமார், அழகுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை கழகத்தின் சார்பில் குடும்ப விழாவாக நாம் கொண்டாடி வருகின்றோம் ஆனால் தி.மு.க.வில் அண்ணாவையே மறந்து விட்டு ஒரு குடும்ப கட்சியாக இருந்து வருகிறது இந்த இயக்கத்தை  1000 ஆண்டுகள் ஆனாலும் கூட யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது அந்த அளவு மிகப்பெரிய ஸ்தல விருட்சமாக இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ளது, பேரறிஞர் அண்ணா தமிழ்மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார், தன் பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்த்தார். தேசிய கட்சிகள் எல்லாம் மாநிலங்களை ஆண்டபோது மாநில கட்சியும் ஆட்சிக்கு வரும் என்று உலகிற்கு உணர்த்தியவர் பேரறிஞர் அண்ணா. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆனால் இன்றைக்கு தி.மு.க.வோ அதை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளது, அண்ணாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் காப்பாற்ற அண்ணாவின் பெயரில் இயக்கத்தை ஆரம்பித்து அண்ணா கொள்கைகளை வைத்து புரட்சித்தலைவர் அ.தி.மு.க வை உருவாக்கினார், அதன் பின் அம்மா அவர்களும் சிந்தாமல் சிதறாமல் அண்ணாவின் லட்சியத்தை காப்பாற்றினார் அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எதற்காக உருவாக்கினாரோ அதை நிறைவேற்றும் வகையில் கழக பணியாற்றி வருகின்றனர்.

வாரிசு இல்லாமல் தலைமுறை, தலைமுறையாக மக்கள் பணியினை ஒரு இயக்கத்தால் செய்ய முடியும் என்பதை இன்றைக்கு கழகம் நிரூபித்துள்ளது, முதலமைச்சர் பதவியேற்கும் பொழுது இந்த அரசு 2 நாட்கள் கூட தாங்காது என்று கூறியவர்கள் மத்தியில் இன்றைக்கு 2 ஆண்டுகள் பல்வேறு சரித்திர சாதனை படைத்து அதன் மூலம் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த இயக்கம் தான் மக்கள் பணியை செய்யும் என்ற வரலாற்று சாதனையை சத்தமில்லாமல் முதலமைச்சர் படைத்துள்ளார், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் பொறுப்பு ஏற்கும் பொழுது இவர் அம்மாவைப்போல் திட்டங்களை செய்வாரா என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இன்றைக்கு அம்மாவைப்போல் இவர் திட்டங்களை செய்கிறார் என்று மக்களே கூறிவருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் அதை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்.

மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும், 30 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல்கடந்து இரவு பகல் பாராது தொழில் முதலீட்டாளர்களையும், தமிழக தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து ரூ.8800 கோடிக்கு மேல் முதலீட்டை தமிழகத்திற்கு 37000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்;துள்ளார். இதற்கு ஸ்டாலின் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டுமென்று கூறுகிறார். 5 முறை தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது இது போன்ற முதலீட்டை ஈர்த்தது உண்டா என்பதை ஸ்டாலின் சிந்தித்து பார்க்க வேண்டும், நாங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம், பொங்கல் பரிசாக ரூ.1000 தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை, ஆனால் மக்களுக்கு நாங்கள் கொடுத்தோம்.
 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் கடனை ரத்து செய்வோம், கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் ஸ்டாலின் மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தார். சொன்னது போல் அவர் செய்தாரா, அவரால் செய்ய முடியாது அது போலத்தான் வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும், அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் கூட விண்வெளியில் வீடுகட்டிதருவோம் என்று கூட கூறி மக்களை ஏமாற்றுவார்கள் திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று கூறுpனார்கள் சொன்னது போல் மக்களுக்கு தந்தார்களா?, நாடு சுதந்திரம் அடைந்த பின் இது போன்ற எளிமையான முதலமைச்சரை நாங்கள் சந்தித்ததில்லை என்று மக்கள் கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் எதையாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்ப பார்க்கிறார்கள் கடைசியில் அவரே குழம்பி போய்விடுவார். நிதிநிலை அறிக்கைக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்கிறார், குடிமராமத்து திட்டத்திற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார், 110 விதிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஏனென்றால் ஸ்டாலினுக்கு  வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து