முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு அடக்குமுறைகளை ஏவி விடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் கடந்த 13-ம் தேதி பேரணி மற்றும் கூட்டம் நடத்தினார்.

இந்த பேரணியில் இம்ரான்கானுடன் இணைந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இந்நிலையில், பேரணியின் போது இம்ரான்கானுக்கு எதிராக ழுழக்கமிட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து