முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாளில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : பிரதமர் மோடி நேற்று தனது பிறந்த நாளையொட்டி தனது தாய் ஹீரா பென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் மோடி நேற்று தனது  69-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு, சினிமா துறை பிரபலங்கள்,  தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் கேவாதியா பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

இதை தொடர்ந்து அகமதாபாத்தில் வசிக்கும் தனது தாய் ஹீரா பென் மோடியை பார்க்க பிரதமர் மோடி சென்றார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அதே போன்று நேற்று அவரிடம் ஆசி பெற்றார். மேலும் தாயுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து