முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே பயிற்சியாளர்தான் என்று கங்குலி தெரிவித்தார்.

ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் முழுதும் பவுலிங் பிட்சில் 774 ரன்களை விளாசித்தள்ளி பல சாதனைகளை உடைத்த நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிடும் பேச்சுகளை கங்குலி ஏற்கவில்லை. விராட் கோலி 903 புள்ளிகளுடன் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்க ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் கோலி-ஸ்மித் ஒப்பீடு குறித்த கேள்வி எழுந்த போது சவுரவ் கங்குலி, இத்தகைய கேள்விகள் பதிலுக்கு உகந்தவை அல்ல. இது என்ன முக்கியமா? இது ஆட்டத்திறன் பற்றியது. விராட் இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர். ஆகவே இதுதான் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஸ்மித்தைப் பொறுத்தவரையில் சாதனைகளே பேசுகின்றன. 26 டெஸ் சதங்கள் மிகப்பெரிய சாதனைதான் என்றார்

என்றாவது ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராவதாக சவுரவ் கங்குலி ஒருமுறை குறிப்பிட்டதைப் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த கங்குலி, முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக் காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே பயிற்சியாளர்தான். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறேன். கடந்த முறை இந்த அணி நன்றாகவே ஆடினர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து